வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் நிலையில் தந்தை இல்லாத நிலையில் சிறுமி மற்றுமொருவரின் பாதுகாப்பில் தாயார் விட்டுச்சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி கைது
மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் சிறுமி தங்கியிருந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.