உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மொனராகலை, வெதிகும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ தினமன்று தாயார் உயிரிழந்த மாணவியின் சகோதரியை மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, இந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.