உடன் அமுலுக்கு வரும் வகையில் 23 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் வேறு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.