தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான பிணைப்பு வரும் காலத்தில் மேலும் இறுக்கமாக இருக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அண்ணாமலை நல்லூரில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவே சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.