வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கத்திற்கு மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளமையுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.