2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுவதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு இன்றையதினம்(06) காலை ஆர்வமாக வருகை தந்திருந்தனர்.
இதன்போது மாணவர்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்ட பின்னர் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சை சென்றதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
வவுனியா
வவுனியாவில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் வவுனியாவில் 40 பரீட்சை நிலையங்கள் மற்றும் 14 இணைப்பு நிலையங்களில் 4309 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் உள்ள இரண்டு கல்வி வலயங்களில் 06.05.2024 இன்று கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருவதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.
கிளிநொச்சியில் 2024 ஆண்டு 33 பரீட்சை நிலையங்கள் 4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
பரீட்சை நிலையங்கள் இணைப்பு செய்யும் வகையில் 10 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க உள்ளது.
பாடசாலை ரீதியாக 3519 பரீட்சார்த்திகள் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.