அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . உயிரிழந்த பெண்ணை பல நாட்களாகக் காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது .
அதன்படி, நேற்று திங்கட்கிழமை (19) பொலிஸார் சென்றபோது , பெண் வீட்டிலுள்ள நாற்காலியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட உடல் சிதைந்த நிலையில் துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.