நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் எ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (26-08-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றையதினம் வங்கி திறக்கப்பட்ட சமயத்தில் எ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு சாதனம் ஒன்றினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.