யாழ். ஊர்காவற்துறையில் 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஊர்காவற்துறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் விஜயேந்திரன் அரணன் என்ற 4 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போயுள்ளார்.
குழந்தை கிணற்றில் இறந்து கிடப்பதை அவரது பெற்றோர் கண்டனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் சடலத்தை போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்டது.