தங்க நகை வாங்குவது என்பது ஒரு வகையான சொத்து சேர்க்கை தான். நம்முடைய அவசர தேவைக்கு அதை அடகு வைப்பது என்பது கூடுமானவரை தவிர்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது, ஆனாலும் ஒருவரிடம் போய் கடன் வாங்குவதை விட, நம்மிடம் இருக்கும் சொத்துக்களை அடகு வைப்பது ஒன்றும் பெரிய தவறு அல்ல என்று அடிக்கடி கொண்டு போய் அடகு கடையில் வைத்து விடுகிறோம்.
ஒருமுறை அடகு கடைக்கு சென்ற நகை மீண்டும் மீண்டும் அடகு கடைக்கு தான் செல்லும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு.
இதிலிருந்து அடகு சென்ற நகை மீண்டும் அடகு செல்லாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் கிடுகிடுவென தங்க நகை சேர்க்கை அதிகரிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் தான் என்ன?
இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஒருவருடைய வீட்டில் தங்க நகை சேர்க்கை அதிகரிக்க மகாலட்சுமியின் அருள் கண்டிப்பாக தேவை. சுவர்ண லட்சுமியின் அருள் இருந்தால் தான் நகையை நாம் வாங்கவே முடியும். காசு கொட்டி கிடந்தாலும் எல்லோராலும் நகை வாங்கி குவிக்க முடியாது.
அதற்கு ஏற்ப செலவுகள் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் நகை சேர்க்கை உண்டாகாது. வாங்கிய நகைகளை பீரோவில் வருட கணக்கில் பூட்டி வைத்திருப்பார்கள்.
இது போல கண்டிப்பாக செய்யவே கூடாது. பூட்டி வைத்த நகைகளில் தோஷங்கள் உண்டாகும் எனவே நகைகளை அணிந்து கொள்ளுங்கள், உங்களிடம் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். சரி தோஷமுள்ள நகைகளை என்ன செய்வது?
எல்லா வகையான பொருட்களுக்கும் தோஷம் இருக்கும் என்று கூற முடியாது ஆனால் சொர்ணத்தில் தோஷம் உண்டு என்கிறது சாஸ்திரங்கள் எனவே நீங்கள் ஒருவரிடம் இருந்து நகையை கடனாக பெற்றால் கூட உப்பு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் நன்கு கழுவி சுத்தம் செய்து அணிந்து கொள்ள வேண்டும்.
அப்போது அவர்களிடம் இருக்கும் தோஷம் உங்களை பாதிக்காமல் இருக்கும். இதுபோல வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய நகையை அடகு வைக்கலாம். அப்படி அடகு வைத்த நகை மீண்டும் அடகுக்கு செல்ல கூடாது என்று நீங்கள் நினைத்தால், அடகு வைத்த நகையை மீட்டு வந்ததும் முதல் வேலையாக நீங்கள் அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து பின்னர் ஒரு வெள்ளை துணியில் முடிந்து கொள்ளுங்கள்.
முடிந்த இந்த துணியை கல் உப்பு இருக்கும் ஜாடிக்குள் கொண்டு போய் வையுங்கள். சில மணி நேரங்கள் கழித்து அதை மீண்டும் எடுத்து பூஜை அறையில் வைத்து கீழ் வரும் இந்த ஸ்வர்ண லட்சுமி மந்திரத்தை மூன்று முறை உச்சரியுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடகு சென்று வந்த நகை மீண்டும் அடகுக்கு செல்லாது என்பது நம்பிக்கை.
அதே போல நீங்கள் புதிதாக வாங்கிய நகையை வெள்ளை துணியில் முடிந்து சந்தன, குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து கீழ் வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து பின்னர் நீங்கள் அணிந்து கொள்ளலாம். இது போல செய்வதன் மூலம் மேலும் மேலும் இதே போல தங்க நகைகளை வாங்கி குவிக்கும் யோகம் வரும்