இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேரக தெரிவித்துள்ளார்.
அதேவேளை , விமானங்களுக்கான ஜெட் எரிபொருள் விநியோகிக்க மற்றுமொரு தனியார் நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.