ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.