நாட்டிலுள்ள சகல மாவட்டத்தையும் இனமத பேதமின்றி வெற்றி பாதைக்கு ஜக்கிய தேசிய கட்சி பலப்படுத்தும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளது.
முள்ளிப்பொத்தானையில் நேற்று முன்தினம் (08-07-2023) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
கட்சியை மீள் எழுச்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலையில் மாவட்ட கட்சி காரியாலயம் ஒன்றை அமைப்பதற்காக திருகோணமலை வந்துள்ளோம்.
கடந்த காலங்களில் இழுத்து மூடப்பட்ட வீதிகள் மற்றும் கடைகள், பால்மா, கேஸ் போன்றவற்றை நாம் எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச அந்நிய செலாவானியை பெற்று இன்று கடன் சுமையிருந்து மீண்டும் நாடு அபிவிருத்தி பாதையில் எமது கட்சியின் சிறு கட்சிகளினுடாக உங்கள் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கி தீர்வு காணலாம்.
உங்கள் மாவட்டம் மாத்திரம் அல்ல அகில இலங்கையில் உள்ள மாவட்டத்தை ஜக்கிய தேசிய கட்சியை பலப் படுத்துவன் மூலம் இனமத பேதமின்றிவெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
அது மாத்திரம் அல்ல இலங்கையின் வருமானத்தை அதிக. பங்குதாரர்களை கொண்ட வங்கிகள் இன்று வட்டி வீதம் குறைக்கப்பட்டு முன்னேற்றப் பதையில் சென்றுள்ளது.
சிலவற்றை எதிர்கட்சி பலி சுமத்தி எந்த பயனும் இல்லை. மக்களை திசை திருப்பி கோலையாக்க எதிர்கட்சி சதித் திட்டம் தீட்டி முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மாகாண சபை நடைபெறாது ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழு நடத்துவதா என்பதை விரைவில் தெளிவுபடுத்தும்.
மக்கள் இப்போது சந்தோசாமாக பொருட்களை தேவைக்கு ஏற்ப கொள்வனவு செய்து வாழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.