ஐ.சி.சி உலகக் கிண்ண 20 / 20 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் இன்று இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெந்திஸ் 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
மேலும், சரித் அசலங்க 31 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பாஸ் டி லீடே மற்றும் போல் வேன் மீகரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அவ்வணி சார்பில் மேக்ஸ் ஓ´டவுட் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
ஸ்கொட் எட்வெர்ட் 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மூன்று விக்கெட்டுக்களையும், மஹீஸ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ´ஏ´ குழுவில் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்தை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.