நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் பண்டாரகம பொல்கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றல்
அத்தோடு 15,000 ரூபா பணமும் இவர்களிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பண்டாரகம பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் துஷார டி சில்வாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.