அயர்லாந்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கையைப் பிடித்து செல்பி எடுக்க வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றை அடிப்படையாக வைத்தே இந்த மூன்று இளைஞர்களும் கண்டி சுற்றுலா பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி கண்டிக்கு சென்றிருந்த அயர்லாந்தைச் சேர்ந்த யுவதியும் ஜேர்மன் நாட்டு இளைஞர் ஒருவரும் கண்டி நகர வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைதான கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவல பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸா