யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (21-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதான ச்கோதார்கள் இருவரும் மதுபோதையில் இருந்தனரென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.