சியம்பலாப்பிட்டியவுக்குப் பதிலாக சியம்பலாப்பிட்டிய எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் கருத்துப் பதிவிட்ட சுமந்திரன் தனது பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாப்பிட்டிய. இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 65. அரச அதிருப்தியாளர்களின் நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று வாக்கெடுப்பின் மூலம் மீண்டும் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசிலிருந்து விலகிவிட்டதாக அண்மைய நாட்களில் அரங்கேற்றி வந்த விவகாரம் நாடகம் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.