எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க எதிர்ப்பார்ப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக இன்று (06) நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த, இம்மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

