நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 7,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,766 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தனது அண்மைய நிலைமை அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 528 குடும்பங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் 57 குடும்பங்களும் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் சீரற்ற காலநிலை காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.