சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென்-சூ உள்ளிட்ட உயர்மட்டக் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (14) காலை இலங்கை வந்தடைந்தது.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அரசாங்க பிரதானிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்