சீதுவ பிரதேசத்தில் 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தாயாரை 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கொலையை செய்திருக்கலாம் என்றும், அவருடன் சில காலமாக உயிரிழந்த பெண் தொடர்பில் இருந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெண் கொலையின் பின்னர், சந்தேகநபர் தனது நண்பரிடம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2 பிள்ளைகளின் தாயான இவர் நேற்று முன்தினம் (13) இரவு ரத்தொலுவ – முத்துவடியா வீதியில் உள்ள தங்கும் அறை ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அனுராதபுரம், பாமுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சீதுவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் சமபவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.