சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு கல்பொத்தாவல ஸ்ரீ பாத விகாரையில் இருந்து சுமன சமன் தேவ சிலையை ஏந்திய வாகன பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 5 மணியளவில் பேரணி ஆரம்பமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகன பேரணியானது பதுளை – இரத்தினபுரி வீதியில் பெல்மடுல்லயிலிருந்து இரத்தினபுரி புதிய நகரம் வரை பயணித்து மீண்டும் அதே வீதியில் இரத்தினபுரி மகா சமன் தேவாலயம் வரை பயணிக்கவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் குறித்த வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் மற்றும் இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை வீதியின் மகா சமன் தேவாலயம் வரையிலான வீதியை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.