முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற புத்தகம் நேற்று வெளியான சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் பிற்பகலில் விற்றுத் தீர்ந்ததாக விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலைமையின் அடிப்படையில் இதன் இரண்டாம் பதிப்பும் சந்தைக்கு வெளியிடப்பட்டு மூன்றாம் பதிப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.