இந்தியாவிற்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகையொன்று இன்று (15) அதிகாலை சிலாபம் இரணைவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகு பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளதால், அதிலிருந்து யாராவது வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இலங்கை கடற்படையினர் இந்தப் படகு தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தற்போது அதற்குப் பாதுகாப்பும் அளித்துள்ளனர்

