காலி சிறைச்சாலையில் அடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஐந்து கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், நோய்த்தொற்றை கண்டறியும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, சிறை வளாகத்தில் உள்ள அனைத்து நபர்களும் தற்போது முகமூடி அணிந்து வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

