லிந்துலை வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவனை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டது.
அந்த பெண்ணை மனோதத்துவ வைத்தியரின் பரிசோதனைக்கு உட்படுத்தி, அப்பரிசோதனை அறிக்கையையும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவானால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதோடு சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.