ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தீர்மானித்தது சிறுபான்மை வாக்குகளா? பெரும்பான்மை வாக்குகளா? என முகநூலில் தீபன் மார்க்ஸ் என்பவர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், கல்முனை 7,286, சம்மாந்துறை 7,151, அக்கரைப்பற்று 5000, மட்டக்களப்பு 38,460, மூதூர் 4,925, திருகோணமலை 12,818, யாழ்பாணம் 23,261, வன்னி 26,105, வேருவலை ஒரு 20,000, நுவரெலிய ஒரு 60,000, அக்குரனை ஒரு 2,000 என சுமார் மொத்தம் 2 20,000 எளிதாக பிரித்தரியக்கூடிய சிறுபான்மை இன வாக்குகள் கோட்டாபய அவர்களுக்கு கிடைத்துள்ளன.
இது தவிர, பிரித்து பார்க்க முடியாத ஆங்காங்கே உள்ள ஜனாதிபதிக்கு ஆதரவாளர்களான சிறுபான்மை இன மக்களின் அளிக்கப்பட்ட வாக்குகள் 280,00 என கருதினால், 4 மில்லியன் அளிக்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் அரை மில்லியன் வாக்குகளை ஜனாதிபதி பெற்றுள்ளார்.
ஜனாதிபதி அரைமில்லியன் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெற்றிருக்காவிட்டால், 6,424,255 வாக்குகளை மட்டும் பெற்று, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 48% வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பார்.
ஆக, ஜனாதிபதியை முதல் சுற்றிலேயே வெற்றி பெற வைத்து, அவரை வெற்றி வாகை சூடவைத்தது, தேசமெங்கும் பரவி இருந்தும் அவருக்கு வாக்களித்த அந்த அரைமில்லியன் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளே.!
நேரடியாக பிரித்தரியக்கூடிய மேலே சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசங்களில் இருந்து 220,000 வாக்குகள் கிடைக்காமல் விட்டிருந்தாலும் ஜனாதிபதியால் 49.99% வாக்குகளை மட்டுமே பெற்றிருக்க முடியும்? அப்படி இருக்கையில், எப்படி சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் தான் வென்றதாக ஜனாதிபதி கூற முடியும் என தீபன் மார்க்ஸ் என்பவர் முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்