சிறுநீரக கடத்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாய் எனப்படும் மொஹமட் பசீர் மொஹமட் ரஜாப்தீன் என்பவரை டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுநீரக கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் பொரளை தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய பிரதான தரகர் 41 வயதான மொஹமட் பசீர் மொஹமட் ரஜாப்தீன் என்ற பாய் இன்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.