உலக கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகளிற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணியினர் அந்த நாட்டில் ஹோட்டலில் அறைகளிற்கு வெளியே சோர்வடைந்த நிலையில் பல மணிநேரம் காத்திருந்த புகைப் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இருந்தது.
இலங்கை வீரர்கள் இவ்வாறு சிம்பாப்வே இல் தவித்த புகைப்படங்கள் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிம்பாப்வேயில் ஹோட்டலிற்கு வெளியே காத்திருக்கும் படங்களை இலங்கை அணியின் பல வீரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். எனினும் இன்ஸ்டகிராமில் பதியப்பட்ட படங்கள் பின்னர் அழிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் , இலங்கை அணியினர் ஹோட்டலிற்கு மதியம் வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்தவேளை மற்றுமொரு அணியும் வந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களிற்கு உரிய அறைகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த விடயத்தை ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.