புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஆனால் இந்த பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் கட்டாயம் நீங்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பரிசோதனைகளை செய்து பார்பதால் நமக்கு முன்கூட்டியே வரக்கூடியே பிரச்சனையை குறைக்க முடியும்.
எனவே மருத்துவரின் அறிவுறுத்தலுடன் இந்த பரிசோதனைகளை செய்வது அவசியம். அது என்னென்ன பரிசோதனை முறை என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உலகிலேயே அதிக புகையிலை பிடிப்பவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டில், 8.5% இளைஞர்கள் புகையிலை பிடிக்கின்றனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய தகவல்கள் நமக்கு கவலையளிக்கின்றன. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்கள் உடலில் புகைபிடிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை கண்காணிக்க, வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
புகைபிடிப்பது பல நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. இது குறிப்பாக நுரையீரல், இதயம் மற்றும் ஒட்டுமொத்த சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. ஸ்பைரோமெட்ரி என்பது உங்கள் நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்பதை அளவிடும் ஒரு சோதனை ஆகும்.
இது ஒரு எளிய சுவாசப் பரிசோதனையாகும். இதன் மூலம் நோயாளியின் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வளவு காற்று நகர்கிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.
புகைபிடிப்பவர்களுக்கு சிஓபிடி போன்ற நோய்களை இது ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. சிஓபிடி என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகள் அல்லது பிற பாகங்களில் ஏற்படும் சேதம் ஆகும்.
இந்த சேதம் காற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சுவாசத்தை கடினமாக்குகிறது. இந்த பரிசோதனை செய்தால் முன்கூட்டியே நோயை தடுக்கலாம்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது நீண்ட நாட்களாக புகைபிடித்தவர்கள், நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய ஆண்டுதோறும் லோ-டோஸ் CT ஸ்கேன் எடுக்க வேண்டும்.
இது நுரையீரல் புற்றுநோய் பிரச்சனைகளை விரைவாக கண்டறிய உதவுகிறது. நுரையீரல் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் ஆபத்துகளை குறைக்க இந்த ஸ்கேன்செய்வது அவசியம்.
இதன் மூலம் உங்கள் நுரையீரல் புற்நோயை தடுக்கலாம். கார்டியோவாஸ்குலர் நோய் இது புகைப்பிடித்தலால் உண்டாகும். இதற்கு எலக்ட்ரோ கார்டியோகிராம் லிப்பிட் ப்ரோஃபைல் மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற சோதனைகள் செய்ய வேண்டும்.
இது இதயத்தின் ஆரோக்கியத்தை மதிப்பிடவும், புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாகக் காணப்படும் கரோனரி அர்டேரி டிசீஸ் , உயர் இரத்த அழுத்தம் அல்லது அரித்மியா போன்றவற்றை கண்டறியவும் உதவுகிறது.
சிபிசி சோதனை இது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை, வீக்கம் அல்லது ஹீமோகுளோபின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை அறிய உதவும்.
புகைப்பிடிப்பவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஒரு பல் மருத்துவர் அல்லது சுகாதார மருத்துவரிடம் ஆண்டுதோறும் வாய்வழி புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதன்மூலட் உங்களுக்கு வாய் புற்றுநோய் அபாயம் இருக்காது. புகைபிடிக்கும் நபர்கள் குறிப்பாக ஆல்கஹால் குடிக்கும் நபர்களுக்கு கல்லீரலின் செயல்பாடு பாதிக்கபடலாம். எனவே ஆண்டுதோறும் LFT பரிசோதனை மேற்கொள்வது நல்லது.