சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவு தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் வருகையை நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பங்குதாரர்களுடன் குறித்த குழு கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.