கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் உட்பட நால்வர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் வேலனி, தொண்டமனாறு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்ப்பாணம் அராலி வடக்கு ஆகிய பகுதிகளை வசிப்பவர்கள் என அறியமுடிகின்றது.
கடந்த மார்ச் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் சந்தேகநபர்கள் குழுவொன்று ஏறி தலைமறைவானது.
பின்னர், கப்பல் பயணிக்கத் தொடங்கியபோது, சூயஸ் கால்வாய்க்கு அருகில் இந்த சந்தேக நபர்களை கப்பலின் கேப்டன் கவனித்தார்.
இதனையடுத்து கப்பலின் கப்டன் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்து சந்தேக நபர்களை இலங்கைக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.