யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் 4 இளைஞர்கள் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (11-09-2022) காலை 6.30 மணியளவில் 20, 20, 21, 23 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

