தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் நேற்றிரவு (04) கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளார்.
தாயின் வீட்டில் மனைவி வசித்து வந்த நிலையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் வெளிநாட்டில் இருந்ததாகவும், ஆகஸ்ட் 31 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்து தனது தாயுடன் வசித்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீண்ட கால குடும்ப தகராறு
நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ததோடு இன்று நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.