சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட வெள்ளைப்பூடு தொகையொன்று மேலிடத்தின் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை பணி இடைநீக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரினால் சதொச தலைவருக்கு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு இந்த உத்தரவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் கடந்த தினம் சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட 2 கொள்கலன் வௌ்ளைப்பூடு தொகையே இவ்வாறு மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் அறிக்கையிடுமாறு அமைச்சர், சதொச தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன சதொச தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.