சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.