நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி ஹட்டன் சதொச கிளையில் கடந்த வாரம் 175 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி சம்பா 200 ரூபாவுக்கும், 145 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சீனி 177 ரூபாவாகவும், 489 ரூபாவாக விற்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பருப்பு கிலோ 560 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் விலைவாசி உயர்ந்தாலும், சில உணவுப் பொருட்கள் குறைந்த அளவிலேயே உள்ளதுடன் அரிசி சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விற்பனைத் தொகையை சதொச நிர்வாகம் மட்டுப்படுத்திய அளவில் விற்பனை செய்து வருகிறது.