இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மமா.வ.ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயம் பாடசாலை மாணவ, மாணவிகள் மேற்கொண்ட நற்செயலால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும் வருங்கால சந்ததியினர்களுக்கு குறித்த மாணவ, மாணவிகள் மிக சிறந்த எடுத்துகாட்டாகவும் திகழ்ந்தமை வாழ்த்துக்குரியது.
பரீட்சை விதிமுறைகளை நேர்த்தியாக பின்பற்றியமை, மேற்பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றமை, பரீட்சை நிறைவு பெற்ற பின்னர் இன்றைய நாளில் அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டப சூழலை & பயன்படுத்திய கழிவறைகளை சுத்தப்படுத்தியமை, மற்றும் கடமையாற்றிய பரீட்சகர்களுக்கு நன்றிகளை மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் இந்த செயலுக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.