பலாங்கொடை – மாரதென்ன பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகின.
இந்த நிலையில், பரீட்சை எழுதச் சென்ற குறித்த மாணவன் அப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு திரும்பியபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை மாரதென்ன பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.