முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை அண்மையில் ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அந்தந்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்களை கேட்டறிந்ததன் பின்னர் அவற்றின் காலத்தை நீடிக்க ஜனாதிபதி செயலகம் தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.