அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படும் முடிவுவை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 15 பேர் சுயதீனமாக இயங்குவது தொடர்பாக தற்போது கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் முடிவுகள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள இவர்கள், எதிர்காலத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை தவிர தற்போதைய நிலைமையில் மாற்று வழியில்லை என கலந்துரையாடிள்ள இவர்கள், அரசாங்கம் தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கும் அழுத்தங்கள் காரணமாக ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் பேசியுள்ளனர்.