ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.