கண்டியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் தொடர்பில் , பெண்ணினின் கணவனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கட்டுக்கஸ்தோட்ட பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றிற்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்று வந்த போதே கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியின் அறிமுகம் கிடைத்துள்ளது.
வர்த்தகர் வியாபார நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்ற வேளைகளில் வர்த்தகரின் மனைவியும் யாழ்ப்பாண மாணவனும் பல இடங்களுக்கு தனிமையில் சுற்றுலா சென்றுள்ளார்கள்.
அவ்வாறு சுற்றுலா சென்ற வேளைகளில் வர்த்தகரின் மனைவியின் பண அட்டை மூலம் பல்வேறு இடங்களில் ஏரிஎம் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லீசிங் அடிப்படையில் மனைவியின் பெயரில் பல லட்சம் ரூபா பெறுமதியான ஆண்களுக்கான நவீன மோட்டார் சைக்கிள் மற்றும் பல பொருட்களும் வாங்கி இளைஞன் பாவித்துள்ளதும், காசோலைகள் மூலமாகவும் இளைஞன் பணம் பெற்றுளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்று திரும்பிய வேளைகளில் மனைவியின் நடத்தையில் சந்தேகமிருப்பதாக வர்த்தகரின் சகோதரி தெரிவித்த முறைப்பாடுகளை அடுத்து , மனைவியின் நடவடிக்கைகள் மற்றும் பண கொடுக்கல் வாங்கல்களில் கணவர் கவனம் செலுத்திய போதே பெருமளவு பணம் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏரிஎம் களிலிருந்து எடுக்கப்பட்டுள்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே மனைவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞனுக்கு தகாத தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தனிமையில் இருந்தபோது அதனை காணொளி எடுத்து மனைவியை அச்சுறுத்தி பல தடவைகளில் பணத்தை யாழ்ப்பாண இளைஞன் பறித்துள்ளதாக பொலிசாரிடம் பெண்ணின் கணவர் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.