கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.