ரஷ்ய பசிபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
“இன்று, பசிபிக் கடற்படையின் முதன்மையான, கார்ட்ஸ் ஆர்டர் ஆஃப் நக்கிமோவ் ஏவுகணை கப்பல் வர்யாக் இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது” என கடற்படையின் பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.
187 மீ நீளமுள்ள இந்த கப்பல் 529 பேர் கொண்ட ஏவுகணை கப்பலாகும்.
கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1 ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இதேவேளை, கப்பலின் கொடி அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்திக்க உள்ளனர்.