கொழும்பு தேசிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தின் ஆறாவது மாடிக்கு இருதய சிகிச்சை நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால், மின்தூக்கியிலும் நெரிசல் ஏற்படுவதாகவும் நோயாளிகள் கூறுகின்றனர்.
மேலும், நாளாந்தம் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் ஆறாவது மாடிக்கு மின்தூக்கி மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இதயம் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான வைத்தியசாலைகளை தாழ்வான கட்டடத்தில் அமைக்குமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.