கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரி கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சந்தேக நபர்களைக் கைது செய்யும் போதே இவர் கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.”
சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.