கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பட்டாலிய பகுதியில் இன்று (13) காலை பேருந்து, கெப், டிப்பர் மற்றும் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின்போது பேருந்து மீது மின்கம்பம் வீழ்ந்ததன் காரணமாகவே பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை காரணமாக படலிய, கல்முனை கல்எலிய பஸ்யால ஊடாக வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

