LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (17) நடைபெற உள்ளன.
கண்டி ஃபெல்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் ஒரு போட்டி நடைபெற உள்ளது.
மற்றைய போட்டி தம்புள்ளை ஓரா மற்றும் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகள் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் திடல் மற்றும் கண்டி பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் திடலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.